முகநூலில் சர்ச்சை பதிவு | சிறையில் அடைத்த போலீசார்
இஸ்ரேல், ஹமாஸ் போர் குறித்து சர்ச்சை பதிவு - ஒருவர் கைது
இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபரை வாலாஜாபேட்டை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் பெல்லியப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா. இவர் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே டிஜிட்டல் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் போர், இஸ்லாமியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். இது குறித்து வாலாஜாபேட்டை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகர தலைவர் அக்பர் பாஷா அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
