போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...
Published on
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டிற்கான போனஸ் தொகை வழங்கப்படாததை கண்டித்து, தொழிற் சாலைநுழைவு வாயிலின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com