மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி - போராட்டம்

x

கூவத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள சீக்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடற்கரை சாலையில் உள்ள பரமன்கேணியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரண நிதி கேட்டு, மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட்டம் திரும்ப பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்