விடாமல் கொட்டிய தொடர் கனமழை - வீணான ரூ.30,000.. விவசாயிகள் வேதனை

x

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. தொடர் மழையால் தண்டலை, குமாரம் அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதால் தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்