Rain | Tiruchirappalli | எல்லாம் கைகூடி வந்த நேரத்தில்.. மொத்தத்தையும் மாற்றி வலியை கொடுத்த இயற்கை
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெல் பயிர்கள் சாய்ந்து, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்...
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் விவசாயி பணிகள் பாதித்துள்ளன. துறையூர் 25 மில்லி மீட்டர், பச்சை மலையில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில், புளியஞ்சோலை பகுதியில் பிரியாணி பயன்பாட்டிற்காக விளைவிக்கப்படும் சீரக நெல் பயிர்கள், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் முற்றிலும் விளைந்த நிலையில் சாய்ந்ததால் , விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அரசிடம் இழப்பீடு கோரிக்கை வைத்துள்ளனர்."
Next Story
