தொடர் மழை : 15 அணைகளில் நீர்மட்டம் உயர்வு

குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர்மட்டம், கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.
தொடர் மழை : 15 அணைகளில் நீர்மட்டம் உயர்வு
Published on
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கனமழை கொட்டி தீர்ப்பதால், திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், தண்ணீரில், தமிழகம் தத்தளிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 14 ஆயிரத்து 98 ஏரிகளில், 2 ஆயிரத்து 144 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 927 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 676 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை, நீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com