மது அருந்தவும், விற்பனை செய்யவும் தடை - ஊராட்சி நிர்வாகம் அதிரடி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள செல்லம்பட்டு ஊராட்சியில் மது அருந்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்குக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளதால் மது அருந்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேனர் வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story