உயர்கல்வித்துறையை மேம்படுத்த திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில், முதலமைச்சர் மு.க.​ஸ்டாலின் தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உயர்கல்வித்துறையை மேம்படுத்த திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
Published on

உயர்கல்வித்துறையை மேம்படுத்த திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில், முதலமைச்சர் மு.க.​ஸ்டாலின் தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், உயர்கல்வியில் மாணாக்கர்களின் சேர்க்கையை மேலும் அதிகரிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பல்கலைக்கழகங்களின் தரத்தினை உயர்த்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதுடன் வேலை வாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தேவையான வருவாய் வட்டங்களில் புதிய கல்லூரிகள் துவங்கவும் ஆலோசிக்கப்பட்டது.கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் பெற முயற்சிக்கவும் தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com