மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு | சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

x

முசிறி அருகே மின்சாரம் தாக்கி இறந்த கூலிதொழிலாளி மாரடைப்பால் இறந்ததாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (45) கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவர் நேற்று மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பெருவள வாய்க்கால் அருகே கூலிவேலைக்கு சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை வாத்தலை போலீசார் மீட்டு வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து ஊர் முக்கியஸ்தர்கள் உடலை பெற்று சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்