"என்னால தாங்க முடியல.. அசிங்கமா இருக்கு.." - மக்கள் கேள்வி கேட்டதால் கதறி அழுத திமுக கவுன்சிலர்
குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் தனது வார்டிற்கு எந்த வித பணியும் செய்யவில்லை என கண்ணீர் விட்டு திமுக பெண் கவுன்சிலர் அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 30வது வார்டு கன்னிமாரியம்மன் பகுதி கவுன்சிலர் காவேரி தனது பகுதி மக்கள் தன்னிடம் கேள்வி கேட்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உடனே ஆணையாளர் இளம்பரிதி உடனடியாக அவரது வார்டிற்கு பணிகள் செய்யுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தின் போது மார்க்கெட் கடைகளை எடுப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
