ரயில் டிக்கெட்டுகளில் மோடி படம் - காங்கிரஸ் எதிர்ப்பு
ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக ரயில் டிக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக ராணுவத்தின் வீரத்தை விற்பனை செய்வது போன்று இது இருப்பதாக அந்த கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள டிக்கெட்டில், இந்திய ராணுவத்தின் வீரதீரத்தை போற்றும் வகையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சார்பாக பிரதமர் மோடி சல்யூட் செலுத்தும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
