திருச்சியில் எதிரெதிர் வேட்பாளர்களான காங்கிரஸின் திருநாவுக்கரசரும், அ.ம.மு.க.வின் சாருபாலா தொண்டைமானும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அவர்கள், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசிடம் ஆதரவு பெற வந்தனர். அப்போது, சந்தித்துக்கொண்ட திருநாவுக்கரசரும், சாருபாலா தொண்டைமானும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.