ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் குடிநீர் ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...
Published on
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தில் இருந்து கமுதி செல்லும் சாலையில் உள்ள, கலியுகராமன் குடிநீர் ஊரணி 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஊரணி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக பராமரிப்பு இன்றி, சீமை கருவேல மரங்கள் முற்செடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மதுபாட்டில்கள் என தூய்மையற்ற முறையில் உள்ளது. இந்த நிலையில் அபிராமம் இளைஞர் காங்கிரஸ் மற்றும் சேவாதள அமைப்பு நிர்வாகிகள், ராகுல் காந்தியின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் ஊரணியில் இருந்த சீமைகருவேல மரங்களை அகற்றியும், குப்பைகள் மதுபாட்டில்களை அகற்றி ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
X

Thanthi TV
www.thanthitv.com