

விருதுநகரில் சட்டவிரோதமாக 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விஜய கரிசல்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், வெம்பக்கோட்டை அருகே பட்டாசுக் கடையும் அதன் பின்புறம் பட்டாசு குடோனும் வைத்திருந்தார். சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,
போலீசார் அதிரடி சோதனை நடத்தி 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.