பொதுத்துறை வங்கி தேர்வு - கணினி சர்வரில் பழுது

மதுரை அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடந்த வங்கி எழுத்தர் பணிக்கான ஆன்லைன் தேர்வின்போது கணினி சர்வரில் திடீரென பழுது ஏற்பட்டது.
பொதுத்துறை வங்கி தேர்வு - கணினி சர்வரில் பழுது
Published on
மதுரை அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடந்த வங்கி எழுத்தர் பணிக்கான ஆன்லைன் தேர்வின்போது, கணினி சர்வரில் திடீரென பழுது ஏற்பட்டது. தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வந்த நிலையில், 100 பேருக்கும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு 12 மணிக்கு மேல் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள், கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதனையத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com