Food Delivery Stop | ``ஜூலை 1 முதல் ஆன்லைன் உணவு டெலிவரி மொத்தமாக நிறுத்தம்’’

x

நாமக்கல்லில் ஜூலை 1 முதல் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தப்படும் என அறிவிப்பு

ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என்று நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற

அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கி ஆன்லைன் வழியாக விற்பனை செய்யும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக குற்றம் சாட்டினர். எனவே அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்