கலெக்டரிடம் புகார்... கட்டான கரண்ட்... ``நல்ல சகுணம்..'' - போராட்டம் நடத்தியவரின் புலம்பல்... ஆட்சியரின் ரியாக்சன்
பண மோசடி செய்தவர்களை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட போது மின் தடை ஏற்பட்டதால் “தனக்கு நாமம் தான்” என புகார் அளித்தவர் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சூரியநாராயணன் என்பவரிடம், வீடு வாங்கித் தருவதாகக் கூறி நவாஸ் என்பவர் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகநூல் நேரலை செய்தவாறே சூரியநாராயணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சூரியநாராயணன் முறையிட்ட போது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, “நல்ல சகுணம்!” என சலித்து கொண்ட சூரியநாராயணன், “தனக்கு நாமம் தான்” என தெரிவித்ததால் அங்கு சிரிப்பு அலை எழுந்தது.
Next Story
