Ration Shop News| `ரூ.30 சன்ன ரக அரிசி’ எனக்கூறி ரேஷன் கடையில் இலவச அரிசியையே விற்பதாக புகார்

`ரூ.30 சன்ன ரக அரிசி’ எனக்கூறி ரேஷன் கடையில் இலவச அரிசியையே விற்பதாக புகார்

`மலிவு விலையில் ரூ.30 சன்ன ரக அரிசி’ எனக்கூறி ரேஷன் கடையில் இலவச அரிசியையே விற்பதாக புகார்

#rationshoprice #rationrice

திருவண்ணாமலையில், மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசி, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் போல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் ஒரு கிலோ சன்னரக அரசி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி, ரேஷன் கடையில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் போல இருப்பதாக குற்றச்சாட்டு புகார்கள் இதையடுத்து, கூட்டுறவு இணைப் பதிவாளர் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டு, அரிசி விற்பனையை நிறுத்த உத்தரவிட்டார். தஞ்சாவூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 டன் அரிசி, மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஆரணி மற்றும் களம்பூரில் இருந்து 12 டன் சன்னரக அரிசி கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com