சென்னையில் BMW வாங்க ரூ.27 லட்சம் கட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னை அம்பத்தூர் பிஎம்டபிள்யூ ஷோரூம் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ கார் ஷோரூமில், ஒரு பிஎம்டபிள்யூ காரை வாங்குவதற்காக ரூ.27 லட்சம் செலுத்தியுள்ளார்.

சனிக்கிழமை கார் டெலிவரி செய்யப்படும் என ஷோரூம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழரசன் புக் செய்த காரை வேறொருவருக்கு வழங்கியதாக ஷோரூம் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பணத்தை திரும்ப பெற வேண்டுமென்றால் டெல்லி செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு பேரிடம் பணம் பெற்றுவிட்டு ஒருவருக்கே காரை விற்பனை செய்த மேலாளருக்கு எதிராக குற்றவழக்கு பதிவு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசன் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்