கூட்டுறவு வங்கி எழுத்தர் உயிரிழந்த விவகாரத்தில், புகார்

x

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மோசடி குற்றச்சாட்டு காரணமாக கூட்டுறவு வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசங்குடி கிராமம், பருத்தி கொள்ளை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் நாடராஜபுரம் வேளாண் கூட்டுறவு வங்கியில் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தான் அடமானம் வைத்த நகையை பார்வையிட வந்துள்ளார். அப்போது, 196 கிராம் நகை கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்காத நிலையில், சாமிநாதன் மீது குற்றம்சாட்டி, கூட்டுறவு இணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சாமிநாதன், கருவகொல்லை பகுதியில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார். இறப்பதற்கு முன் சாமிநாதன் இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். இதில் தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்