நித்யானந்தா மீது கனடா பெண் பரபரப்பு புகார்

நித்யானந்தா மீது கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நித்யானந்தா மீது கனடா பெண் பரபரப்பு புகார்
Published on

நித்யானந்தா மீது கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவரிடம் சிஷ்யையாக சேர்ந்து, திருவனந்தபுரம் ஆசிரமத்தில் பணியாற்றி வந்த கனடா பெண் சாரா லேண்டரி, தம்மை நித்யானந்தா மூளைச்சலவை செய்தார் என வீடியோ மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரமத்தில்,

சிறுவர் - சிறுமிகள், கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் வினோதினி சங்கர் என்பவர், தனது மகனுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து, முகநூலில் வெளியிட்ட பதிவையும் சாரா லேண்டரி சுட்டிக் காட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள நித்யானந்தா, தனக்கு, அவப்பெயர் ஏற்படுத்த, சாரா லேண்டரி முயற்சிப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com