போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது புகார்
சென்னையில் மது போதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு பயணிகள் தகவல் அளித்தனர். ஆம்னி பேருந்து அசோக்பில்லர் வந்ததும், ஓட்டுநரிடம் மது சோதனை நடத்தப்பட்டது. ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 40 சதவீதம் காண்பித்ததால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, டிராவல்ஸ் நிறுவனம் மாற்று ஓட்டுநரை ஏற்பாடு செய்து பேருந்தை இயக்கியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
Next Story
