மாரடைப்பால் கம்யூ. நிர்வாகி மரணம் - பாதியிலேயே நின்ற கூட்டம்
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் உணவு உண்ட போது, தருமபுரி துணை செயலாளர் தமிழ் குமரன் மாரடைப்பால் உயிரிழந்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில குழு பொதுக்கூட்டம் புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், திடீரென தருமபுரி மாவட்ட துணை செயலாளர் தமிழ் குமரன் மாரடைப்பால் உயிரிழந்ததால் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
Next Story
