தைலாபுரம் தோட்டம் அருகே வெளிமாநில இளைஞரால் பரபரப்பு
திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மே மாதம் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதால் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆவடி பகுதியை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தலையில் கட்டுடன் சாலையில் தள்ளாடிவாறே வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த நபர் ஒருவர் திடீரென ராமதாசின் இல்லம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் நின்று திண்டிவனம் நோக்கி சென்ற வாகனங்களை மறித்தவாறு இரு கைகளை உயர்த்தி நின்றார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குளான நிலையில் சிறிது நேரம் கழித்து ராமதாசின் இல்லத்திற்குள் செல்ல முற்பட்டதால் காவலர்கள் மதுபோதையில் இருந்தவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ராமதாஸ் இல்லம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.