முதல், 2ம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் - சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை

முதலாமாண்டு மற்றும் 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடியாக வகுப்புகளை தொடங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முதல், 2ம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் - சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை
Published on

கடந்த ஆண்டு இறுதியில் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் முதல், முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் நேரடியாக வகுப்புகளை துவங்க உயர் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி வளாகங்களை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்கனவே வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், விடுதிகளை திறக்கவும், கொரோனா பரிசோதனைக்கு பின் மாணவர்களை விடுதிகளில் அனுமதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com