College Students | Tn Govt | மாணவர்களுக்கு குட் நியூஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு

x

கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு டிசம்பர் 3வது வாரத்தில் தொடங்க உள்ளது.

2025-26 தமிழக பட்ஜெட்டில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்க திட்டமிடப்பட்டது.

முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட் அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியது.

திட்டத்தின் தொடக்க விழாவை டிசம்பர் 19 அல்லது 20 ஆம் தேதியில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என தொடர்ந்து 3 மாதங்களில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணியை அரசு முடிக்கத் திட்டமிட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்