ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற 2 இளைஞர்கள் மீது எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
