"படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை" : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை" : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் அக்கரைபட்டி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட இரு பிரிவு மாணவர்களுக்கு செயல் முறை தேர்வு நடத்தப்பட வில்லை என தெரிகிறது. இதனால் படித்து முடித்து 3 ஆண்டுகள் ஆன போதும் மாணவர்கள் பலர் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com