College Student Kidnapping | காலேஜ் பஸ்ஸில் ஏறி மாணவியை கடத்த முயற்சி - அலறிய சக மாணவிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே, கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவியை, அவரை காதலித்த தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பேருந்தை வழிமறித்து கடத்த முயன்றனர். ஆனால், பேருந்தில் இருந்த சக மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
