ஓரினச் சேர்க்கையால் விபரீதம் - கல்லூரி மாணவி தற்கொலை

x

கடலூர் அருகே நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என பெண் தோழி மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவியும் 2ம் ஆண்டு மாணவியும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2ஆம் ஆண்டு மாணவி தனது பழக்கத்தை துண்டித்ததால், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியட்டு விடுவேன் 3ஆம் ஆண்டு மாணவி மிரட்டியதால், தனது மரணத்திற்கு மாணவி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு 2ஆம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்