காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததால் கல்லூரி மாணவர், மாணவி தற்கொலை
ஆம்பூர் அருகே காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததால் நர்சிங் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நித்தின் என்பவர் கர்நாடகாவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் இதே கல்லூரியில் படித்து வரும் தாரணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தாரணி எட்டுமாத கர்ப்பமானதையடுத்து இருவரும் காதலித்த விவகாரம் இருவரது வீட்டிலும் தெரியவந்தது. இதனையறிந்த நித்தின் ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணியான தாரணியும் தற்கொலை செய்து கொண்டபோது, அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
