கல்லூரி மாணவி மர்மமான முறையில் தற்கொலை - சென்னை ஐஐடியை தொடர்ந்து திருச்சியிலும் சோகம்

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி மர்மமான முறையில் தற்கொலை - சென்னை ஐஐடியை தொடர்ந்து திருச்சியிலும் சோகம்
Published on

திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில், தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் தங்கி படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா பர்வீன், நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கல்லூரி பாடங்களை ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள சிரமப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில், மாணவி, செல்போன் பயன்படுத்தியதால் விடுதி காப்பாளர் திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கல்லூரி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் பயின்று வந்த மாணவர் செந்தில்குமார் என்பவர் தேர்வு தோல்வி காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com