மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி முதல்வரின் உதவியாளர் கைது
சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி முதல்வரின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி, கடந்த 20 ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவரை சோலைராணி காதலித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட புகைப்படம் வெளியானதால் கல்லூரி முதல்வர் இருவரையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்ய துண்டியதாக கூறி சக மாணவிகள் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கல்லூரி முதல்வர் அசோக் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் மணிமாறனையும் போலீசார் கைது செய்தனர்.
அதே நேரத்தில் கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
