துணை முதல்வர் உதயநிதியுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்த கல்லூரி மாணவிகள்
நாமக்கல் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன், கல்லூரி விடுதி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 89.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள 141 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2099 பயனாளிகளுக்கு 33 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் சமூக நீதி விடுதியினை திறந்து வைத்து அங்குத் தங்கிப் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
Next Story
