கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை ராயப்பேட்டை அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவை சேர்ந்த மாணவி ஒருவர், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் பெற்றோர் நன்றாக அமைந்துவிட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும், தனக்கு அதுபோல் அமையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
Next Story
