"தாடியை எடுக்க சொன்ன கல்லூரி நிர்வாகம்" | தமிழக முதல்வரிடம் புகார் அளித்த மாணவர்

x

தாடியை அகற்ற தனியார் மருத்துவ கல்லூரி அழுத்தம் - மாணவர் புகார்

தாடியை அகற்ற கோவையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி அழுத்தம் கொடுத்ததாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய மாணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு–காஷ்மீரை சேர்ந்த சுபேர், கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சிறுநீரகவியல் துறையில் மேற்படிப்பு சேர வந்துள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி விதிகளின் படி தாடியை அகற்ற வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற சுபேர் இது குறித்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவர்கள் சங்கத்தினர் மூலம் தமிழக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், தாடியை அகற்ற வலியுறுத்தவில்லை என்றும், தாடியை டிரிம் செய்து கொள்ள அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்