Nellai | Collector | Police | சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்.. திரண்ட மக்கள்-நெல்லையில் பரபரப்பு

சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்.. திரண்ட மக்கள்-நெல்லையில் பரபரப்பு

Nellai | Collector | Police | சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்.. திரண்ட மக்கள்.. நெல்லையில் பரபரப்பு

#Nellai #Collector #Police

நெல்லை மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு மேட்டுப்பிராஞ்சேரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமான கோவில் நிலத்தின் அருகே பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் இல்லம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டக்காரர்களை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால், உரிய தீர்வு கிடைக்காமல் அலுவலகத்திற்குள் வரமாட்டோம் எனக்கூறி, மீண்டும் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com