Collector | "நான் என்ன ட்ரிப்பா வந்துருக்கேன்.." - கோபத்தில் அதிகாரிகளை திட்டிய கலெக்டர்
ஆவணங்களை கொண்டுவராத அதிகாரிகள் - கோபப்பட்ட ஆட்சியர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கடிந்துகொண்டார். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் ஆட்சியர் கேள்வி எழுப்பினார்.
அதுதொடர்பான ஆவணங்களையும் கொண்டு வராததால் கோபம் அடைந்த ஆட்சியர், நான் என்ன சுற்றுலா வந்திருக்கிறேனா, ஆவணங்களை சரிபார்க்க மாட்டீர்களா என அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
Next Story
