அதிகாரியை கடிந்துகொண்ட கலெக்டர்.. பரபரப்பு வீடியோ

x

தேனி அருகே பளியன்குடியில் நடத்தப்பட்ட மக்கள் தொடர்பு முகாமில் குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலரை ஆட்சியர் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள பளியன்குடியில் மலை கிராம மக்களுக்காக மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் முகாமில் குழந்தைகள் நல வளர்ச்சி திட்டத்தின் துறை சார்பில் கண்காட்சி எதுவும் அமைக்கப்படாததால், ஆட்சியர் ரஞ்சித் சிங் ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரியை கடுமையாக கடிந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்