Tiruvannamalai Temple | ஸ்பெஷல் தரிசனம் என் சொல்லி வெளிமாநில பக்தர்களிடம் வசூல் வேட்டை
#Tiruvannamalai #Temple #Devotional #Police #Arrest #ThanthiTV
Tiruvannamalai Temple | ஸ்பெஷல் தரிசனம் என் சொல்லி வெளிமாநில பக்தர்களிடம் வசூல் வேட்டை - 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிமாநில பக்தர்களிடம் விரைவு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பணம் வசூலித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினரிடம் பணம் பெற்று, விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக எழுந்த புகாரில், திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயராஜ் மற்றும் சிவநாதன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வெளிமாநில பக்தர்களை கோவிலுக்குள் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகர்களாக இருவரும் செயல்பட்டு வந்தது தெரியவதது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்... இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள், இடைத்தரகர்களை முற்றிலும் ஒழிக்க கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்...
