இடிந்து விழுந்த மதில் சுவர் - 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

x

ராஜபாளையம் அருகே கனமழையால் அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அம்மையப்பபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர், 350க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமறித்து மேய்ச்சல் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் பட்டி அமைத்து 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமறித்து வந்த நிலையில், அன்றிரவு பெய்த கனமழையால் அருகிலிருந்த தனியார் அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து விழுந்து பட்டி அடைக்கப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் பலியாகின. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்