மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி
Published on
ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி, ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை சுந்தரராஜன் பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆடுகளுக்கு காய்ச்சல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் ராஜா என்ற கூலித் தொழிலாளி அரசு வழங்கிய இலவச ஆடுகளுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் நடராஜனை சந்தித்த அவர், அரசு வழங்கிய 6 இலவச ஆடுகள் 40 ஆடுகளாக அதிகரித்த நிலையில், தற்போது நோயால் 20 ஆடுகள் இறந்து விட்டதாகவும், கால்நடை மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் புகார் கூறினார். இதையடுத்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஆட்சியர் தகவல் கொடுத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com