Govt Hospital | லீவில் இருந்தும் உயிர் காக்க ஓடி வந்த அரசு டாக்டர் - கண்ணீர் மல்க நன்றி சொன்ன தாய்

x

திருப்பத்தூரில், 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு சிகிச்சை அளித்து நாணயத்தை வெளியில் எடுத்த மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் லலிதா. இவரது 7 வயது மகள் கனிஹீ, ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து விடுமுறையில் இருந்த மருத்துவர் தீபானந்தன், சிறுமியின் நலன் கருதி பணிக்கு திரும்பி, தொண்டையில் சிக்கிய நாணயத்தை வெளியில் எடுத்தார். இதையடுத்து மருத்துவருக்கு சிறுமியின் தாய், மருத்துவருக்கு கண்ணீர் மல்க தன் நன்றியை தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்