விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

கோவை அருகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து கேரளாவிற்கு மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை
Published on

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு, தமிழகம் வழியாக டவர் லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. உடனடியாக அங்கு வந்த வட்டாட்சியர், விவசாயிகளின் பிரச்சினையை அரசிடம் எடுத்து சொல்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com