13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்

கோவையில் 13 வயது தங்கையை, 17 வயதான அண்ணன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்
Published on

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் ராமு, ராணி தம்பதிக்கு 13 வயதில் மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர். தனியார் கல்லூரியில் மகனும், பள்ளியில் மகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில், வீ்ட்டில் தங்கை தனியாக இருந்தபோது, ஆசைவார்த்தை கூறி, அவரை அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததால், தங்கை கர்ப்பமானார்.

மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பெற்றோர், மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, தலைமறைவான சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com