கோவையில் விநாயகர் சிலை சேதம் - சம்பவ இடத்தில் புதிய சிலை நிறுவும் பணி தீவிரம்

கோவையில் விநாயகர் சிலை சேதமாகி இருந்த நிலையில், இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் விநாயகர் சிலை சேதம் - சம்பவ இடத்தில் புதிய சிலை நிறுவும் பணி தீவிரம்
Published on

கோவை பெரியக்கடை வீதியில் அமைந்திருந்த விநாயகர் சிலை ஒன்று சேதமாகி இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடப்பாரை கொண்டு உடைத்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, கோவில் அருகே அமைந்துள்ள கடைகளில் பொறுத்தப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட இடத்தில் புதிய விநாயகர் சிலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com