கோவையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கோவை முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
Published on

கோவை முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத் என பல்வேறு அமைப்பினரும் ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், கணுவாய், தடாகம் என பல பகுதிகளில், பொதுமக்களும் பலவித விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். பல இடங்களில், செண்டை மேளம், தப்பாட்டம் என பல மேள தாளங்களும் களைகட்டின.

X

Thanthi TV
www.thanthitv.com