கோவையில் 7ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவையில், பெற்றோருடன் அடிக்கடி ஏற்பட்டு வந்த தகராறால், மனமுடைந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் 7ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
Published on

கோவை சுந்தராபுரம் பகுதியில், வெல்டிங் வேலை செய்து வருபவர் முத்துக்குமார், இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள், பெற்றோரிடம் சண்டை வேண்டாம் என பலமுறை கூறியும், இருவரும் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்திருந்த, மகள் நந்தினி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com