

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். பெயின்டரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.