Coimbatore | "ஏழை மாணவர்களும் மருத்துவராகும் கனவை நனவாக்கியவர் பிரதமர் மோடி" - துணை ஜனாதிபதி பேச்சு

x

"ஏழை மாணவர்களும் மருத்துவராகும் கனவை நனவாக்கியவர் பிரதமர் மோடி"

ஏழை மாணவர்களும் மருத்துவராகும் கனவை நனவாக்கியது பிரதமர் மோடி என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய நரம்பியல் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவை, அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றார்.

2014-ம் ஆண்டுக்கு முன் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ இடங்கள், அதிகரித்திருப்பது சாதாரண சாதனை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்